பதிவு செய்த நாள்
03
மார்
2023
11:03
தர்மபுரி: சிறுகல்லுாரில், 80 ஆண்டுகளுக்கு பின், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
தர்மபுரி மாவட்டம், சோமனஹள்ளி அடுத்துள்ள சிறுகல்லுாரில், 300 பேர் வசிக்கின்றனர். கடந்த, 80 ஆண்டுக்கு முன் வரை, அப்பகுதியினர் அனைவரும் ஒன்றாக திருப்திக்கு சென்று வருவது வழக்கம். அச்சமயத்தில், திருப்பதியிலுள்ள பெருமாள் கோவில் போன்று, சிறுகல்லுாரில் கோவில் கட்ட முடிவு செய்தனர். கோவில் கட்டிய பின்பு, வழக்கம் போல் ஒன்றாக திருப்பதி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, அப்பகுதியினர் தங்களது முன்னோர்களின் விருப்பம்போல், சிறுகல்லுாரில் பெருமாள் கோவிலை கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, சிறுகல்லுார் கிராம மக்கள் அனைவரும், தங்களது முன்னோர் எண்ணப்படி, நேற்று முன்தினம் இரவு ஒன்றாக திருப்பதி புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, தங்களது பகுதியில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிப்பாடு நடத்தினர். கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக திருப்பதி சென்றதால், சிறுகல்லுார் எல்லையில், இண்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.