Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி திருவிழா: பொற்கலை அம்பாளுடன் ... கோவை பிரசன்ன மகாகணபதி கோவில் பிரதிஷ்டை தின விழா கோவை பிரசன்ன மகாகணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் காளி கோயிலில் வைர மூக்குத்திகள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
மடப்புரம் காளி கோயிலில் வைர மூக்குத்திகள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

03 மார்
2023
11:03

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகள் திருட்டு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பிரம்மாண்ட குதிரையின் கீழ் அம்மன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். அம்மன் முகத்தில் இரண்டு வைர மூக்குத்திகள் பொருத்தப்பட்டிருந்தன. பூஜையின் போது தீபாராதனை வெளிச்சத்தில் வைர மூக்குத்தி மின்னுவது பக்தர்களை பரவசமடைய செய்யும், நேற்று முன்தினம் இரவு பச்சை துண்டை முகத்தில் மறைத்து வந்த மர்மநபர் சர்வ சாதாரணமாக கோயில் வளாகத்தில் உலா வந்து அம்மன் மூக்குத்திகளை கழட்டி கொண்டு குதிரையின் கால்கள் வழியாக வெளியேறியுள்ளார். நேற்று காலை பூஜையின் போது திருட்டுச்சம்பவம் அறிந்த கோயில் நிர்வாகம் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளனர். கோயில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தலைமையில் இரண்டு பேர் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த போதும் திருட்டுச்சம்பவம் நடந்துள்ளது. கோயிலில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக மர்ம நபர் உலா வந்துள்ளார். பாதுகாவலர்கள் யாருக்கும் தெரியவில்லை.

கோயில் நிர்வாகம் சார்பில் கூறுகையில்: வைர மூக்குத்தி கிடையாது, ஏ.டி.,கல் என கூறப்படும் வைரத்திற்கு அடுத்தபடியான கல் நகை அது, ஒரு பக்கம் 22 கிராம் மறுபக்கம் 25 கிராம் எடையுள்ள தங்க பொருள் தான் போலீசில் புகார் கொடுத்துள்ளோம், என்றனர்.

பக்தர்கள் கூறுகையில்: பகலில் கோயில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் பக்தர்களை அலைக்கழிப்பது, அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கோயிலில் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது கிடையாது. இரவு நேரத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பது கிடையாது, போதையில் தூங்குகின்றனர், என்றனர். கோயிலில் மர்மநபர் உலா வந்து திருடும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar