வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டியில் எல்லம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமாலை துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அருள்மலை ஆதிநாத பெருமாள் கோயில் அர்ச்சகர் ரெங்கராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஊர்பெரியதனக்காரர்கள் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாட்டினை நடுத்தெரு கவரா நாயுடு பங்காளிகள் செய்திருந்தனர்.