இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளியாலான கதவுகள் பொருத்தப்படும் என்று அறிவித்தார் அதன்படி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபயதாரர் ரவிச்சந்திரன் அவர்களின் மூலம் வெள்ளி கதவுகள் அமைக்கப்பட்டது சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நிறைவு செய்து வெள்ளி கதவுகள் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி கோவில் பரம்பரை அரங்காவலர் அழகு மகேஸ்வரி கோவில் உதவி கமிஷனர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.