பதிவு செய்த நாள்
06
மார்
2023
08:03
திருச்செந்துார் : திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்.
திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா, பிப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று 9ம் திருவிழாவை முன்னிட்டு, பகலில் சுவாமி குமரவிடங்க பெருமான்,சுவாமி அலைவாயுகந்த பெருமான் ஆகியோர், தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்திற்கு, பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், பல்லக்கில் வீதியுலா வந்தார். இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளிக் மல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு கடாட்சம் நிகழ்ச்சி நடந்தது.
இன்று 10வது திருநாளை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து, உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், காலை 7:00 மணி முதல் 7:30 மணிக்குள் மீன னத்தில் துவங்கியது. தேரோட்டத்தில் விநாயகர், முருகர், வானை அம்பாள் தனித்தனி தேர்களில் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து அருள்பாலித்து வருகின்றனர். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர். நாளை 7-ம் தேதி 11ம் திருநாளை முன்னிட்டு, இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.