அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய கூட்டம்: பக்தர்களுக்கு இலவச நீர் மோர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2023 08:03
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று (ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால், காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோடை காலம் தூங்குவதை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது.