விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக விழா : தர்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2023 10:03
கடலூர் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத்தை முன்னிட்டு புன்னிய நதியான மணிமுத்தாற்றில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக பெருவிழா பிப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. மக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்த வாரி மணிமுத்தா ஆற்றில் இன்று நடைபெற உள்ளது. தீர்த்தவாரியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வர். மாசி மகத்தை முன்னிட்டு புன்னிய நதியான மணிமுத்தாற்றில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை தெப்ப உற்சவமும், மறுநாள் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.