பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
திருப்புவனம்: திருப்புவனம் தேரடி வீதி அக்னி வீரபத்ர சுவாமி கோயில் விழாவை ஒட்டி ஆறு வருடங்களுக்கு பிறகு நள்ளிரவில் கிடாவெட்டி 6ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அக்னிவீரபத்ரன் சுவாமி கோயிலில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பச்சைகுடில் விழா பத்து நாட்கள் நடைபெறும், திருப்புவனம் நகர மக்கள் மற்றும் புஷ்பவனேஸ்வரர் தேர் ஆகியவற்றை காவல் காக்கும் அக்னி வீரபத்ரன் சுவாமிக்கு பச்சைகுடில் விழா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் தினசரி வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து வீரபத்ரன் சுவாமி கோயில் வாசலில் உள்ள பச்சைகுடிலில் வைத்து பக்தர்கள் வணங்குவார்கள்.10வது நாள் விழாவில் வீரபத்ரன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கிராம மக்கள் நேர்த்தி கடன் நேர்ந்த பக்தர்கள் சார்பில் 108 ஆட்டு கிடாய்கள் பலியிட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதான விருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்தது. பச்சைக்குடில் விழா பத்து நாட்கள் நடைபெறுவதை ஒட்டி தேரடி வீதி உள்ளிட்ட கரகம் ஆடி வரும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டன. பக்தர்கள் கரகம் ஏந்தி வீதியுலா வருகை தருவதால் தெருக்கள் தூய்மைப்படுத்தப் பட்டதுடன், தெரு மக்களும் குப்பைகள், கழிவுகளை தெருக்களில் வீசி எறியாமல் தூய்மையாக நடந்து கொண்டனர். இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் தெருவில் நடந்த அசைவ அன்னதான விழாவில் பக்தர்கள் விரும்பி பங்கேற்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தொண்டரணி தலைவரும், திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி சார்பில் அக்னி வீரபத்திரனுக்கு வெள்ளி கீரிடம் அனுவிக்கப்பட்டது.
பக்தர்கள் கூறுகையில்: அன்னதான விழாக்கள் பகலில்தான் தொடர்ச்சியாக நான்கு முதல் ஐந்து வரிசைகள் வைத்து உணவு பரிமாறப்படும், ஆனால் பச்சை குடில் நள்ளிரவு அசைவ விருந்து மட்டும் ஒரே சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அமர வைத்து உணவு, கறி உள்ளிட்டவைகள் பரிமாறப்படும், என்றனர்.
கவுன்சிலர்களுக்கு பாராட்டு: பத்து நாட்கள் பச்சைகுடில் திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து தேரடி வீதி வரை வலம் வருவார்கள். 10ம் நாள் விழா அன்று தெருக்களில் அசைவ அன்னதானம் நடைபெறும், இதனையடுத்து கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி ஆகியோர் மேற்கண்ட தெருக்களில் தினசரி மூன்று வேளையும் தூய்மை பணி நடைபெறவும், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கவும், பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்ததையடுத்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.