பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு கடந்த சில வாரங்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
தேவிப்பட்டினத்தில் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, ஏவல், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு, பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக நவபாஷாணத்திற்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் நவபாஷாணத்திற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது. நேற்று, வழக்கத்திற்கு மாறாக காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக, கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததால், பக்தர்கள் கடலுக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் நவகிரகத்தை சுற்றியுள்ள நடைமேடை வழியாக, பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்து சென்றனர்.