கோயில் பராமரிப்பு பணிக்காக மண் தோன்றிய போது 3 அம்மன் சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 11:03
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள்ளிக்குடியில், கோயில் புதுப்பிப்பு பணிக்காக மண் தோன்றிய போது 3 அம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள்ளிக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த பழமை வாய்ந்த சிவன் கோயில் பராமரிப்பு இல்லாத நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில், கிராமத்தினர் ஒன்றிணைந்து கோயில் மேற்பகுதியை இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்டுமான பணியை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், கோயில் அமைந்திருந்த பகுதியில் பில்லர் குழிக்காக, இயந்திரம் மூலம் மண் தோன்டியுள்ளனர். அப்போது மண்ணுக்குள் புதைந்திருந்த மூன்று அம்மன் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதியில் உள்ள பெரியோர்கள் கூறுகையில், இந்தக் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்தில், கோயிலில் இருந்த சிலைகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. தற்போது மண் தோண்டும்போது அந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றனர்.