ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் மாசித் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் மாசி திருவிழா பிப்.24 ல் துவங்கி மார்ச் 7 வரை நடக்கிறது. விழாவில் தினமும் பல்லாக்கு அன்னம், மேஷம், பூதம், யானை, மயில், குதிரை, புஷ்ப வாகனத்தில் சுவாமி உலா வந்தார். பத்தாம் நாளான நேற்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷகம் செய்து, மலர் அலங்காரத்தில் திருத்தேரேற்றம் செய்தனர். காலை 10:30மணிக்கு ஊரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தர். விழாவின் நிறைவாக இன்று தீர்த்தவாரியுடன், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.