பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
திருக்கழுக்குன்றம்: ஹிந்து சமய உற்சவங்களில், மாசி மக தீர்த்தவாரி உற்சவம் குறிப்பிடத்தக்கது. இந்த உற்சவத்தில், சுவாமியர், கடல், தீர்த்தகுளங்களில் புனித நீராடுவர்.
மாசி பவுர்ணமி நாளில் கடலிலும், மக நட்சத்திர நாளில் குளத்திலும், தீர்த்தவாரி நடைபெறும். திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் சங்குதீர்த்தகுளத்தில் நீராடும் நிலையில், நேற்று தீர்த்தவாரி உற்சவம் கண்டார். உற்சவர் சந்திரசேகர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் அபிஷேகம், அலங்கார வழிபாட்டைத் தொடர்ந்து, கோபுரத்தை தரிசித்து, கோவிலிலிருந்து புறப்பட்டனர். மாட வீதிகள் வழியே கடந்து, நண்பகல் சங்குதீர்த்தகுளத்தை அடைந்தனர். அங்கு, கோவில் அஸ்தராயர், தனியே வந்தார். சிறப்பு வழிபாட்டைத்தொடர்ந்து, 11:45 மணிக்கு, அஸ்தராயர் குளத்தில் புனித நீராடி, தீர்த்தவாரி கண்டார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். மாலை குளத்து தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், அபிஷேக அலங்கார வழிபாட்டைத் தொடர்ந்து, வீதியுலா சென்றார்.