பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 11:03
உசிலம்பட்டி: பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி விழா கோயில் வழிபாடு நடத்துபவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் வருவாய்த்துறை, போலீசார் முன்னிலையில் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கை வழங்கிய உண்டியல்களையும் தாலுகா அலுவலகம் எடுத்து வந்தனர். நேற்று உண்டியல் எண்ணும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். ரூ. 5 லட்சத்து 13 ஆயிரத்து 43 காணிக்கையாக வந்திருந்தது. திருவிழாவிற்கான செலவு தொகை போக மீதி தொகை 4 லட்சத்து 29 ஆயிரத்து 533 ஐ கோயில் பெயரில் பாங்க் கணக்கில் செலுத்தினர்.