குலுமாவிளக்காளியம்மன் கோயிலில் மாசி களரி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 11:03
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் குலுமாவிளக்காளியம்மன் கோயில் உள்ளது. மாசி களரி உற்ஸவ விழாவை முன்னிட்டு லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம், அக்னி சட்டி ஊர்வலம் புறப்பட்டு அம்மன் சன்னதியில் வந்தடைந்தது. காலை 10 மணி அளவில் மூலவர் சித்தி விநாயகர் குலுமாவிளக்காளியம்மன், வேலாயுத பெருமான், அய்யனார், ஆஞ்சநேயர், தர்ம முனீஸ்வரர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை லோகநாதன், சரவணன், எம்.சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.