காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஜடாயுபுரீஸ்வர கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜடாயுபுரீஸ்ஸ்வர சுவாமி தேவஸ்தான மாசிமகப்பெரு விழா கடந்த 26ம் தேதி விக்னேஸ்வர பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவையொட்டி தியாகராஜர் புறப்பாடு. சேஷவாகனத்தில் வீதியுலா. தேர்திருவிழா.புஷ்பப்பல்லாக்கு மற்றும் ராமர் வனவாசம் சென்ற போது சீதையை ராவணன் கடத்தி செல்லும் போது வழிமறித்த ஜடாயு எனும் பறவை பூஜித்த தலமாக உள்ளது. மேலும் இக்கோவில் எதிரோ உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நேற்று ஸ்ரீசந்திரசேகர சுவாமி.அம்பாள் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் இந்நிகழ்ச்சியில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ..உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.