Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்ம வாகனத்தில் முத்துமாரியம்மன் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் நிறைவு திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

10 மார்
2023
12:03

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் சுபகிருத் வருடத்திற்கான ‘பிரம்மோத்ஸவ உற்சவம்
இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள இக்கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். முதல் நாளான இன்று (10ம்தேதி) காலை 4.00 மணியளவில் உற்சவமூர்த்தி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். பின்னர் அனந்தராயர் மண்டபத்திலிருந்து கொடிப்படம் திருவீதி உலா வந்து கும்பலக்னத்தில் துவஜாரோஹணம்   மற்றும் பெருமாள் ஆஸ்தானம் நடைபெற்றது. இன்று மாலை 6.30 மணியளவில் உற்சவ பெருமாளும் , தாயாரும் திருச்சிவிகையில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து திருமஞ்சனம், அலங்காரம் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார்கள். உற்சவத்தின் இரண்டாம் திருநாளான நாளை  காலை 11.03.23 கற்பக விருட்சம், மாலை அனுமந்த வாகனத்திலும், மூன்றாம் திருநாளில் 12.03.23 அதிகாலை பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடத்திருக்காவிரி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் அதிகாலை 13.03.23 அன்று புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருவெள்ளரை திருக்கோயிலின் கண்ணாடி அறை சேருகின்றார். உற்சவத்தின் நான்காம் நாளில் 13.03.23 அன்று இரவு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு திருவீதிகள் வலம் வந்து கண்ணாடி அறை சேருகிறார். இந்த உற்சவம் வரும் 20.03.2023 முடிய நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar