பதிவு செய்த நாள்
10
மார்
2023
06:03
பந்தலூர் : எஸ் .என் .டி .பி .நீலகிரி யூனியனின் பந்தலூர் கிளையில் ஸ்ரீ நாராயண குரு தேவரின் சீடர்களில் ஒருவரான பூஜாரிய நடராஜகுரு சுவாமி அவர்களால், பிரதிஷ்டை நடத்தப்பட்ட பழமையான ஸ்ரீ நாராயண குரு கோவில் மறு சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டமாக நேற்று சிவகிரி மடம் தந்திரி பிரஹ்மஸ்ரீ சிவ நாராயணன் தீர்த்த சுவாமிகளின் தலைமையில், பாலாலய பிரதிஷ்டை பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு குரு பூஜையும், 7 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், காலை 9 மணிக்கு கலச பூஜை தொடர்ந்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டதுடன், இந்துக்கள் கோவிலுக்கு தினசரி வருவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் பிந்துராஜ், மாவட்டத் தலைவர் பீதாம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர் விலாசினி, மற்றும் நிர்வாகிகள் ஜெயா, ரவிக்குமார், சுரேஷ், செந்தாமரை, பிரசாந்த், குஞ்சு கண்ணன், சாந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.