மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியில் நாகசத்தி அம்மன் பீடம் உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் மக்கள் அதிகளவு பாதிக்ககூடாது என்பதற்காக, நேற்று நாகசக்தி அம்மன் பீடத்திலுள்ள நாகேஸ்வரமூர்த்தி. ராகு, கேதுவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உலக நலன் வேண்டி நடந்த இந்த பூஜையில், 1008 மூலிகைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது. சிவசண்முகபாபு சாமி, பூஜையை நடத்தினார். பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாய பொடி வழங்கப்பட்டது. உமாமகேஸ்வரி, பாக்யலட்சுமி, வனஜா, தங்கதுரை உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.