குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2023 08:03
புதுச்சேரி : கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேறறு மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி மாலை 4.30 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து மகா கணபதி ேஹாமம் நடந்தது. பின்னர் இரவு 7.15 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள், தேவசேனாதிபதி குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.