மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2023 02:03
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இராஜமன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா. இன்று காலை த்வஜாரோஹணம் தங்க கொடி மரத்தில் கருட உருவம் பொரிக்கப்பட்ட கொடி வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விழாவில் ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.