அவிநாசி கருணாம்பிகை அம்மன் சன்னதி 5 நிலை ராஜகோபுரம் பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2023 03:03
அவிநாசி: அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் சன்னதியின் முன் உள்ள 5 நிலை ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடைபெறுகின்றது. தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேரும்,சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாகவும்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில்,கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் ஆகிறது. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகளில் ஆரம்ப கால மராமத்து பணிகள் நடைபெற துவங்கியுள்ளது. முன்னதாக அரசுமரத்து விநாயகருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாலாலயமும்,தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் திருப்பணிகளுக்கான பாலாலய பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து, நாளை மாலை 6 மணிக்கு கருணாம்பிகை அம்மன் சன்னதி முன்புறமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு மராமத்து செய்து வண்ணம் தீட்டும் வேலை நடைபெறுகின்றது. ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் பவுண்டேஷன் சார்பில்,திருப்பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நடைபெற உள்ளது.