பதிவு செய்த நாள்
11
மார்
2023
03:03
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமம் சதுரங்க நாயகி அம்மன், சந்தன கருப்பணசாமி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் மார்ச் 8 காலை 9:05 மணி தொடங்கி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக, லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜைகள், ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. மார்ச் 9 அன்று காலை, மாலை இரண்டு மற்றும் மூன்றாம் காலையாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6:30 மணி தொடங்கி நான்காவது காலயாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 8:30 மணிக்கு மகாபூர்ணாகுதி நிறைவடைந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகிய, பின்னர் காலை 9:30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஆலய குடிமக்கள், திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.