பதிவு செய்த நாள்
11
மார்
2023
06:03
திருநீர்மலை, திருநீர்மலையில் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவ விழா, மார்ச், 10 முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, கொடியேற்றப்பட்டது. வரும் 14ல் இரவு கருட சேவை, 16ல் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பத்து நாட்கள் நடக்கும் பங்குனி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.