நெல்லையப்பர் கோயிலில் மீண்டும் சந்தனாதி தைலம் தயாரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2023 08:03
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 2021ம் ஆண்டு ஆய்வு நடத்தினார். இதில் 100ஆண்டுகளுக்கு முன்பு கோயில் வளாகத்தில் சந்தனாதி தைலம் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சந்தனாதி தைலம் காய்ச்சும் முறையை துவக்கவேண்டும் என அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் கோயில் வளாகத்தில் சந்தனாதி தைலம் காய்ச்சும் பணி துவக்கப்பட்டு பல வகைமூலிகை பொருட்கள், சந்தன கட்டைகள், நல்லெண்ணெய், பால், இளநீர்மற்றும் பல பொருட்களை சேர்க்கப்பட்டு சந்தனாதி தைலம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றது. இந்ததைலத்தை இந்து சமய அறநிலையத் துறைஉதவி கமிஷனர் கவிதா, கோயில் செயல் அலுவலர்அய்யர் சிவமணி, நெல்லை மேற்கு பிரிவு ஆய்வர்தனலட்சுமி முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு உச்சிகாலத்தில் சுவாமிக்கு சாத்தப்பட்டது.