பதிவு செய்த நாள்
13
மார்
2023
09:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவின் ஒன்பதாம் நாளான இன்று பெரிய சக்கரதீவெட்டி பவனி நடக்கிறது. மண்டைக்காடு திருவிழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலில் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். கடற்கரைக்கு சென்று வரும் பக்தர்கள் பின்னர் அம்மனை வழிபாடு செய்கிறார்கள். திருவிழா கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு
பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் யானை மீது சந்தனகுடம்பவனி, பகல் 12 மணிக்கு அனந்தமங்கலத்தில் இருந்து காவடி பவனி, 12.30 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 1 மணிக்கு உச்சகால பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கூட்டுமங்கலம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து சந்தனகுடம் பவனி, 6.15க்கு தங்கதேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை நடக்கிறது. 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருகிறார். யானை மீது பவனி பத்தாம் நாளான நாளை அதிகாலை 2 மணிக்கு பால்குளம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் பவனி, காலை 4.30 மணி முதல் மாலை 5மணி வரை அடியந்திரபூஜை, காலை 6 மணி முதல் குத்தியோட்டம்மற்றும் பூமாலை , மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, இரவு 12 மணிக்கு சாஸ்தா கோவில் வளாகத்தில் இருந்து ஒடுக்கு பதார்த்தங்கள் பவனி, 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தொடர்ந்து திருக் கொடிஇறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு அடைக்கப்படும் திருநடை மாலை 5 மணிக்கு தான் திறக்கப்படும். பகல் 13 மணி நேரம் கோவிலுக்குள் எந்த பூஜையும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் அம்மனின் முகம் தெரியும் விதத்தில் கோவிலின் மேற்பகுதி நடை திறந்திருக்கும்.