திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்பாள், நவகாளி அம்பாள் கோயில் அலங்கார வளைவுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலுக்கு அலங்கார வளைவு அமைக்க திருப்பணி நடந்தது. வளைவுக்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மார்ச் 12 மாலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்து பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு கோ- பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு வளைவுக்கு கும்பாபிஷேகம் நடந்ததது. தொடர்ந்து நவகாளி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.