திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
அதனையொட்டி, கடந்த 9ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், நாககன்னி, அல்லி, சுபத்திரை, ராஜசுய யாகம் உட்பட 5 திருக்கல்யாணம் நடந்தது. 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு கரகத் திருவிழாவும், 10:00 மணிக்கு அலகு நிறுத்துதலும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மாடு வளைத்தல், குறவன், குறத்தி ஆட்டம், காளி வேடமணிந்து கோட்டை இடித்தல் நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இரவு 8:30 மணிக்கு நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.