திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி திருவிழா தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2023 09:03
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நடந்தது. திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன் தினம் கோலாகலமாக நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை10.30 மணிக்கு ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நம்பியாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில் வைஷ்ணவர்களுக்கு விடைசாதித்தல் ஜீயருக்கு ராஜ வரிசை மரியாதை, தீர்த்தவாரி வினியோகம், கோஷ்டி நடந்தது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.