திருப்பரங்குன்றம் கோயிலில் பித்தளை கதவுகளுக்கு பாலிஷ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2023 10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 26ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ரத வீதிகளில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது. திருவிழாவிற்காக கோயில் ஆஸ்தான மண்டபதிலுள்ள பித்தளை கேட்டுகள், கோயிலுக்குள் உள்ள அனைத்து பித்தளை கதவுகள், நிலை படிகள் களுக்கு பாலிஷ் போடும் பணி நேற்று துவங்கியது. கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைர தேரில் ஏப். 9 அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள கிரி வீதியில் தேரோட்டம் நடைபெறும். அதற்காக தேரை சுற்றி மூடப்பட்டிருந்த கண்ணாடி கதவுகள் அகற்றப்பட்டு, தேர் சீரமைக்கும் பணிகளும் நேற்று துவங்கியது.