பதிவு செய்த நாள்
20
மார்
2023
03:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரம் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டலம் அருகிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் எழுப்பிவாறும், ‘ஓம் நமச்சிவாயா’ என, மந்திரங்களை கூறியும், நந்தியம்பெருமானை வழிபட்டனர். மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.