திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்: நாளை யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 02:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை யாக சாலை பூஜைகள் துவங்குகின்றன.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க விமான திருப்பணி தனியாக நடக்கிறது. மற்ற விமான, ராஜகோபுர , சுவாமி சன்னதிகளுக்கு திருப்பணி பூர்த்தியாகி மார்ச் 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை யாக சாலை பூஜைகள் காலை 10:15 மணிக்கு ஆச்சார்யர் அழைப்புடன் துவங்குகிறது. மாலை 5:15 மணிக்கு அங்குரார்ப்பணம், கும்ப பூஜையுடன் துவங்க இரவு 10:00 மணிக்கு பூர்ணாகுதி திருவாராதனம் நடந்து முதல் கால யாக பூஜை நிறைவடையும். தொடர்ந்து தினசரி காலை 7:00 மணி, மாலை 4:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்கி, தினசரி 2 கால பூஜைகள் நடைபெறும். மார்ச் 27 காலை 8:05 மணிக்கு 8ம் கால யாகபூஜைகள் நிறைவடைந்து, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, காலை 9:38 முதல் 10:32 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் அலங்கார திருவாரதனம் நடைபெறும். காலை 11:50 மணிக்கு ஸர்வ தரிசனம் நடக்கும். இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள், எம்பெருமானார் தங்கப்பல்லக்கிலும் திருவீதிப் புறப்பாடு நடக்கும்.