சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 03:03
சென்னை : சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் திருமலையில் நடப்பது போலவே பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் தினசரி பூஜைகள் உள்ளிட்ட அனைத்து உற்சவங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் இன்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.