பதிவு செய்த நாள்
23
மார்
2023
03:03
அவிநாசி: அவிநாசி கிழக்கு வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில்,மாவிளக்கு எடுத்து வருதல் பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி கிழக்கு வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் மற்றும் அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில், நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 100ம் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து சென்றனர். பின்னர் ஊர்வலமாக நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், கம்பம் சுற்றி ஆடுதல் நடைபெற்றது. நேற்று, மாவிளக்கு எடுத்து வருதல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், பூவோடு எடுத்து வருதல், கம்பம் பிடுங்கி கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.முன்னதாக, கடந்த வெள்ளி அன்று பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனை, அம்மனை அழைத்து கம்பம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு, கோவில் விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.