ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, ஜெர்மன் நாட்டு பக்தர் ஒருவர் கோயிலில் அம்மனை தரிசனம் செய்தார்.
நேற்று மாலை 5:00 மணியளவில் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். மேலும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதிக்கும் இடத்தில் இருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 60 வயதுக்கு மதிக்கத்தக்க, வெள்ளை வேட்டி கட்டி, காவித்துண்டு அணிந்த வெளிநாட்டு பயணி ஒருவர், தனது அலைபேசி மூலம் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனை அங்கிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வணங்கினார். அவரிடம் கேட்டபோது, யோவான் ப்ரம் ஜெர்மனி என ஆங்கிலத்தில் தெரிவித்தார். பின்னர் தனது டூவீலரில் புறப்பட்டு சென்றார்.