திருமெய்ஞானம் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி: புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2023 04:03
மயிலாடுதுறை : தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்தின், பிரம்மன் உயிர் பெற்ற தலமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம். இன்று கோவிலில் அசுபதி தீர்த்தவாரி நடைப்பெற்றது. இந்த நாளில் புனித நீராடுவது சிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவில் தீர்த்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து புனித நீராடினர். இந்த நீர் காசிக்கு இணையாக புனித நீராக கருதப்படுகிறது. பசுபதி தீர்த்தவாரியை முன்னிட்டு அசுர தேவருக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது பூஜைகளை ராமலிங்கம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடியும் சாமி தரிசனம் செய்தனர்.