பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
ஆத்தூர்: ஆத்தூரில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது.ஆத்தூர் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 4ம் தேதி காலை கால் நட்டுதலும், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும் நடந்தது. 10ம் தேதி மாலை வாஸ்து சாந்தி பூஜையும், அம்பாள், சுவாமி மாக்காப்பு அலங்கார தீபாரதனையும் நடந்தது. கொடை விழா தினமான 11ம் தேதி காலை பூஜையும், பின்னர் பந்தன பிரவேச பலியும், தாமிரபரணியிலிருந்து பால்குடம் எடுத்து வீதி சுற்றி வருதலும், யாகசாலை பூஜையும், உச்சிகால ஆராதனையும், மாலையில் கும்பக்குடம், மகுடம் வருதலும், இரவில் அலங்கார பூஜையும், அம்பாள் ஊர்வலமும், படைப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் திரளான பெண்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.