ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.1.74 கோடி கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 40 நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் துணை ஆணையர் மாரியப்பன் விண்ணுலகில் கோயில் ஊழியர்கள் காணிக்கைகளை சேகரித்தனர். பின் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ஒரு கோடியே 74 லட்சத்தி 87 ஆயிரத்து 154 ரூபாயும், தங்கம் 34 கிராம், வெள்ளி 3 கிலோ 550 கிராம் காணிக்கையாக கிடைத்தது தங்கம் 34 கிராம் வெள்ளி 3 கிலோ 550 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் பாஸ்கரன், கோயில் ஆய்வாளர் பிரபாகரன், பேஸ்கார்கள் கமலநாதன், செல்லம், முனியசாமி பலர் பங்கேற்றனர்.