பதிவு செய்த நாள்
26
மார்
2023
03:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
இக் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பாலசுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனித்தனி சன்னதிகளுக்கு தலா ஒரு கொடிமரம் அமைந்துள்ளது விசேஷமானது. திருவிழா துவக்கம்: கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று (மார்ச் 26 ) ம் தேதி நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 4 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கும். முக்கிய திருவிழாவான 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் ஏப்ரல் 3ல் நடக்கிறது. கொடியேற்றத்தின் போது ஹோமம் பூஜைகள் நடந்தது. ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்) வாகனமான ரிஷபம் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்தின் விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. புனித நீர் ஊற்றி உற்சவமூர்த்திகளான விநாயகர்,சண்டீகேஸ்வரர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, வள்ளி தேவசேனா பாலசுப்பிரமணியருக்கு தீபாராதனை நடந்தது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கும். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு, குரு தட்சிணாமூர்த்தி சேவா சங்கம் தலைவர் சரவணன், சிவனடியார்கள் அறக்கட்டளை தலைவர் குணசேகரன், திருவிழா உபயதாரர்கள் சுகுமாரன், ரவீந்திர பாண்டியன், அழகர், சவுந்திரபாண்டியன், திரிசங்கு மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.