அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 04:03
குரும்பூர்: மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 4 மணிக்கு மா கணபதி ஹோமம், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலில் வலம் வருதலும் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து விழாவின் 6ம் நாளான மார்ச் 31ம் தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10ம் நாளான ஏப்.4ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஆத்திக்கண், அகோபால், உதயகுமார், தினேஷ், செந்தில், நாராயணராம், சுப்பிரமணியன், ஆகியோர் செய்து வருகின்றனர்.