பதிவு செய்த நாள்
27
மார்
2023
04:03
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு த்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு ஸ்ரீவரமங்கைத் தாயார் சமேத வானமாமலைப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மூலவர் சுயம்புவாக தோன்றியவர். இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்றது திருத்தலமாகும். இக்கோயிலில் மட்டுமே ஜடாரியில் நம்மாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது இதனால் பூஜைகள் நடைபெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஜடாரியில் ஆசீர்வாதம் கிடையாது. திருமலை திருப்பதியில் இருந்து இங்கு எழுந்தருளிய ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கும், வானமாமலை பெருமாளுக்கும் நடக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி திருக்கல்யாண திருவிழா என 11 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை திருமுளைச்சாற்று மற்றும் சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்று காலை கோயில் நடைதிறந்ததும் விஸ்வரூபம் தரிசனம், எண்ணெய்காப்பு காலைசந்தி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப்பெருமாள் கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து நான்குநேரி மடத்தின் 31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜஜீயர் ஆசிர்வாதத்துடன் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான க்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு கருடசேவை நடந்தது. வரும் 30ம் தேதி 5ம் திருநாள் கருடசேவையும், ஏப். 1ம் தேதி 7ம் திருநாளன்று சப்பரம், கண்ணாடி சப்பரம் பவனி நடக்கிறது. ஏப். 4ம் தேதி 10ம் திருநாளன்று காலையில் தங்க தேரோட்டம், இரவு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரி மற்றும் பட்டணபிரவேசம் வைபவம் நடக்கிறது.