பதிவு செய்த நாள்
27
மார்
2023
04:03
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணியில் வாசக்கால் வைக்கும் பூஜை நடந்தது.
உளுந்தூர்பேட்டையில் சேலம் ரவுண்டான அருகே திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் கோவில் நுழைவு வாயில்களில் வாசக்கால் வைக்கும் பூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு சிறப்பு பிரதிநிதியுமான குமரகுரு தலைமை தாங்கி பூஜையுடன் வாசக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மவிகாச ப்ரியா அம்பா, ஐ.ஜே.கே.,மாநில அமைப்பு செயலாளர் வெங்கடேசன், விவசாயணி மாநில செயலாளர் சபாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மணிராஜ், விநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், ம.தி.மு.க..மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தி.மு.க., நகர அவை தலைவர் சிவராஜ், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, கூட்டுறவு சங்க தலைவர் சம்பத்ஐயர், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், வழக்கறிஞர்கள் அன்பழகன், பக்கிரிசாமி, மோகன்ராஜ், திலீப், வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், சாய், விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்ஷன், சத்யா ஸ்வீட் கடை உரிமையாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.