மானாமதுரை: மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடத்தப்பட்டு சன்னதி முன்பாக 108 சங்காபிஷேகம் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.