ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 01:03
சோழவந்தான்: சோழவந்தானின் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத 17 நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள பலிபீடத்தில் மூன்றுமாத கம்ப கொடியேற்றம் நடந்தது. இவ்விழாவினை தொடர்ந்து மே 17ல் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மே 22ல் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியும், மே 30ல் பால்குடம், தீச்சட்டி உள்ளிட்ட பக்தர்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும், மே 31ல் பூக்குழி விழாவும், ஜூன் 6ல் தேரோட்ட திருவிழாவும், ஜூன் 7ல் வைகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். மண்டகபடிதாரர் ராசு அம்பலத்தின் குடும்பத்தினர் இவ்விழாவினை நடத்தினர். அறநிலையத் துறையின் சார்பில் செயல் அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி, கணக்கர் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.