மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா துவக்கம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 01:03
மயிலாப்பூர்: மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டு, மகா தீபாரதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. ஏப்ரல் 3ம் தேதி காலை தேரோட்டம், ஏப்ரல் 4ம் அறுபத்தி மூவர் வீதியுலா, ஏப்ரல் 6ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.