பழநி: பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து உப கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் நடேசன் சன்னதி தெருவில் உள்ள கோசல விநாயகர் கோயில், உத்திர விநாயகர் கோயில், மேற்கு ரத வீதியில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களுக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில், முத்துக்குமாரசாமி மண்டபத்தில் கணபதி பூஜையுடன் நடந்தது. கலசத்தில் புனித நீர் நிரப்பி, யாக குண்டமும் வைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. அதன் பின் யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீரை எடுத்து விநாயகர் கோயில்களுக்கு சென்று அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. இதேபோல் வருடாபிஷேகம், தெற்குகிரி வீதியில் உள்ள வட துர்க்கை அம்மன் திருக்கோயில், மேற்கு வீதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்களில் நவ கலசங்களை வைத்து கணபதி பூஜை உடன் வேள்வி நடைபெற்றது. அதன் பின் புனித நீரை அம்மனுக்கு அபிஷேகம், செய்து சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. நேற்று ஐந்து கோயில்களில் வருட அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.