மாவிலாத்தோப்பில் பங்குனி பொங்கல், முளைக்கொட்டு உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 11:03
கீழக்கரை: கீழக்கரை அருகே மாவிலாத் தோப்பில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் 50ம் ஆண்டு பங்குனி பொங்கல் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த மார்ச் 21 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை 7:00 மணி அளவில் மாவிலாத்தோப்பு விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், காவடி, அக்னி சட்டி உள்ளிட்டவைகளுடன் நேர்த்திக்கடன் பக்தர்கள் கோயிலுக்கு வந்தடைந்தனர். மூலவர்கள் செல்வ விநாயகர், பாலமுருகன், பத்திரகாளியம்மன், கருப்பண்ணசாமி, தேரடி மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். கரகம், முளைப்பாரிகளுடன் நகர் வீதி உலா நடந்தது. இன்று மாலை 4:00 மணி அளவில் மஞ்சள் நீராட்டு வைபவமும் முளைப்பாரி ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை மாவிலாத்தோப்பு நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.