ராமேஸ்வரத்தில் பங்குனி உத்திர விழாவுக்கு வேல்கள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 05:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பங்குனி உத்திர விழா காவடிக்கு பக்தர்கள், ராமநாதபுரத்தில் இருந்து வேல்களை எடுத்து வந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசலில் உள்ள முருகன் சுவாமிக்கு ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள முருக பக்தர்கள் பறக்கும் காவடி, தேள் காவடி, வேல் காவடி, பால் காவடியை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கடந்தாண்டு வேல் காவடியை அலகில் குத்திய பக்தர்கள், இரும்பில் வடிவமைத்த இந்த வேல் உப்பு காற்றில் துருப்பிடிக்காத வகையில், ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் வைப்பார்கள். வரும் ஏப்., 5 ல் பங்குனி உத்திர விழா நடக்க உள்ளதால், ராமநாதபுரத்தில் இருந்த 13 முதல் 8 அடி நீளம் வரை உள்ள 200 வேல்கள் மற்றும் மரத் தேரை பக்தர்கள் லாரியில் ஏற்றிக் கொண்டு ராமேஸ்வரம் வந்தனர். இந்த வேல்களுக்கு விபூதி, புளி கலந்த கலவையில் புதுப்பித்து ஏப்., 5ல் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.