பதிவு செய்த நாள்
31
மார்
2023
08:03
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நாளை முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.
லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு துவங்கி நண்பகல் 12:30 மணிவரையிலும், மாலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடை பெறுகிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்களிடம், அர்ச்சனை ஒன்றுக்கு,150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படும். பங்குனி உத்திரமான ஏப்., 4ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடக்கிறது. அதைத் தொடர்ந்து, ஏப்., 5 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. முதல் நாள் தெப்பத்தில் வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.