நத்தம், நத்தம் அருகே ரெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள கவரயபட்டி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. விழாவையொட்டி முன்னதாக கிராம தேவதைகளுக்கு கனி எடுத்து வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு வத்திபட்டியில் இருந்து அம்மன் வானவேடிக்கைகளுடன் அழைத்து வரப்பட்டு கோவிலில் கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் அக்கினிசட்டி, அங்கப்பிரதட்சனம் மாவிளக்கு ,கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் நேற்று மாலையில் வர்ணக் குடைகள் தீவட்டி பரிவாரங்களுடன் பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.