மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் திருமண மண்டபம் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 04:04
தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு ரூ. 3.30 கோடி மதிப்பீட்டில் திருமணம் மண்டபம் கட்டுமானப்பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான, பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் சக்திவாய்ந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை. இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகின்றது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து பக்தர்கள் வழங்கி வருகின்றனர். இரு மாதங்களுக்கு முன்பு மாசி சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடந்தது. பூமி பூஜை: கோயில் எதிர்புறம் வளாகத்தில் ரூ. 3.30 கோடி மதிப்பீட்டில் திருமணம் மண்டபம் கட்டடப்பணிக்கு நேற்று பூமி பூஜை ஆர்.டி.ஓ., சிந்து தலைமையில் நடந்தது. தரைத்தளம் 235 நபர்கள் சாப்பிடும் டைனிங் ஹால் 489.00 சதுர மீட்டர், முதல் தளம் திருமணக் கூடம் 268 நபர்கள் சேரில் உட்கார்ந்து பார்க்கலாம் 485.00 சதுர மீட்டரில் மண்டபம் அமைய உள்ளது. 11 மாதத்திற்குள் கட்டுமான பணி முடிவடையும். பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன், ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், செயல் அலுவலர் வேலுச்சாமி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி மற்றும் ஆன்மிக பக்தர்கள் பங்கேற்றனர்.